×

சிவகங்கை அருகே 800 ஆண்டு பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு

சிவகங்கை : ஏரியூரில் 800 ஆண்டுகால பராக்கிரம பாண்டியன் கால கல்வெட்டு கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.சிவகங்கை அருகே ஏரியூர் மலைமருந்தீஸ்வரர் கோயிலில் 800 ஆண்டுகள் பழமையான பராக்கிரம பாண்டியன் கால கல்வெட்டை பாண்டிய நாடு பண்பாட்டு மைய வரலாற்று ஆர்வலர்கள் குழு கண்டறிந்தது. இக்குழுவின் நிர்வாகிகள் மீனாட்சிசுந்தரம், தாமரைக்கண்ணன் கூறியதாவது :இரண்டு கல்வெட்டுகள் கண்டறியப்பட்ட நிலையில் இரண்டும் ஒரு முழுமையான கல்வெட்டாக இல்லாமல் எழுத்துகள் சிதைந்து போய் உள்ளன. இதில் காணப்படும் பாண்டிய மன்னனின் பெயர் பராக்கிரம பாண்டியன் என உள்ளது. பாண்டிய நாட்டை பராக்கிரம பாண்டியன் என்ற பெயரில் நிறைய மன்னர்கள் ஆட்சி செய்துள்ளனர். அதனால் இவர் எந்த பராக்கிரம பாண்டியர் என்ற குழப்பம் ஏற்பட்டாலும் இந்த கல்வெட்டில் உள்ள எழுத்துக்களின் அமைப்பை வைத்து பார்க்கும்போது 12ம் நூற்றாண்டை சேர்ந்தது என்று கருதலாம்.இந்த பராக்கிரம பாண்டியர், பாண்டிய நாட்டை கிபி 1150 முதல் 1160 வரை ஆட்சி செய்தவர். இவர் இடைக்கால பாண்டியர் காலத்தை சேர்ந்த மன்னர் ஆவார். இன்று ஏரியூர் என்று அழைக்கப்படும் இவ்வூர், முன்பு மாதேவி நல்லூர் என்று அழைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள மலை மருந்தீஸ்வரர் என்னும் சிவன் கோயிலுக்கு புன்செய் நிலங்களை தானமாக வழங்கப்பட்டதை இக்கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. அதேபோல இக்கல்வெட்டை செய்தவரின் பெயரும் சற்றே சிதைந்த நிலையில் முழுமையாக இல்லாமல் உள்ளன.இவ்வாறு தெரிவித்தனர்….

The post சிவகங்கை அருகே 800 ஆண்டு பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு appeared first on Dinakaran.

Tags : Sivaganga ,Sivagangai ,Ariyur ,Malamarundeeswarar temple ,
× RELATED சிவகங்கை அருகே முத்துப்பட்டி அரசு...